பொறாமை வேண்டாம் | பொறாமை கொண்ட கழுதையின் குட்டிக்கதை | சிறுவர்களுக்கான கதை

 

Designed by @Freepik

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். அந்த கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான். அவன் பண்ணையாரிடம் வேலைக்காரனாக பல வருடங்களாக பணியாற்றி வந்தான்.

பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்தது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால், நாய் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும். அவர் அமர்ந்திருக்கும் போது, உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சி துண்டுகளையும், உயர்ந்த ரக உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.

பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை, பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டு, பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது.

நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே. நான் செய்வதைப் போன்றே நீ செய்தால், பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.

கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா, நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.

அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு, வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது.

பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.

நீதி: பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால், அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.


The Story:

In a village, there lived a landlord. He had a dog and a donkey for carrying loads at his house. The donkey was looked after by a servant who had been working for the landlord for many years.

The landlord had a lot of affection for his dog. This was because the dog had caught and handed over thieves to him twice. Whenever the landlord returned home, the dog would wag its tail to show its gratitude. When the landlord sat down, the dog would lay comfortably on his lap and lovingly lick his face. The landlord, in return, would give the dog pieces of meat and high-quality food, treating it with great affection.

The donkey, living in the landlord's house, felt jealous of all the privileges given to the dog. It thought it deserved all the perks that the landlord gave to the dog.

One day, the donkey decided that it too would lie on the landlord’s lap and lick his face just like the dog did. The dog understood the donkey’s plan and said, “Friend, don’t be jealous of the privileges I get. If you do what I do, the landlord will not tolerate it. He will beat you up and throw you out of the house.”

The donkey didn’t heed the dog’s advice. It told the dog, “Friend, watch what happens. See how happy the landlord will be with my actions.”

After that, the dog didn’t say anything. That day, the landlord, dressed in a white shirt and white dhoti, was sitting and reading a book in the house. Immediately, the donkey ran up and sat on his lap. It licked his face with its tongue and then let out a loud bray.

The landlord got very angry. He took a stick nearby and beat the donkey thoroughly. Unable to bear the pain, the donkey ran away into the forest, crying loudly.

Moral: We should not be jealous of the privileges others get. If we are jealous, it will only lead to our downfall.