கனவு பொய்யானது! பரமார்த்த குரு கதைகள் | தமிழ் சிறுகதைகள்
Designed by @Freepik |
பரமார்த்த குரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவருடைய சீடர்களான மட்டி, மூடன், முட்டாள், மடையன் ஆகியோரும் அவருடைய அருகில் கிட்டத்தட்ட உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த உறக்கத்தில், இருந்த பரமார்த்த குரு , “ஆஹா! பொன்! வெள்ளி! வைடோரியம்!” என்று உறக்கத்திலேயே கூச்சலிட்டார். அருகில் சாய்ந்து கொண்டிருந்த சீடர்கள் அதிர்ச்சியடைந்து, குருவை குலுங்கி உடனே அவரை எழுப்பினார்கள் .
பரமார்த்த குரு உறக்கத்திலிருந்து எழுந்து, “நீங்கள் முட்டாள்கள்! ஏன் என்னை எழுப்பினீர்கள்? நான் ஒரு அருமையான கனவு கண்டு கொண்டிருந்தேன், அதை நீங்கள் கெடுத்துவிட்டீர்கள்!” என்று கடிந்து கொண்டார்கள்
அவரது கனவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்த சீடன் மட்டி ஆவலுடன், “குருவே ...நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் ?” என்று கேட்டான்
பரமார்த்த குரு , கனவை நினைத்த்து பார்த்துவிட்டு , “பொருள்! பொருள் பொன்! வெள்ளி! வைடோரியம்!!” என்று சத்தம் போட்டார்.
“பொன்னா? ! வெள்ளியா? ! வைடோரியமா ? எங்கு? எங்கு?” என்று சீடர்கள் ஆவலுடன் கேட்டார்கள் .
யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, மெல்லிய குரலில் பரமார்த்தர், “சீடர்களே, இந்த அறையின் பின்புறம் உள்ள தோட்டத்தில், சனி மூலையில், பொன்னும் வெள்ளியும் நிறைந்த ஒரு குடம் இருப்பது எனக்கு கனவில் வந்தது!” என்றார்.
மிகுந்த மகிழ்ச்சியில், சீடன் மட்டி , “அட தெய்வமே! அந்த குடத்தில் நிறைய பொன்னா?” என்று உற்சாகமாகக் கேட்டான் .
அதற்கு மூடன் , “குருவே! இந்த புதையலை நாம் என்ன செய்வது?” என்று கேட்டான்.
முடடாள் சீடன் , “நாம் குருவிற்கு ஒரு பெரிய அழகான குதிரையை வாங்குவோம்!” என்றார்.
மடையன், “நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு குதிரை வாங்கலாம்!” என்று மகிழ்ச்சியாக கூறினான்.
மூடன் , “குருவே! இந்த இடம் நல்லது அல்ல. இதை இடித்துவிட்டு, ராஜாவை மிஞ்சும் ஒரு அரண்மனை கட்டுவோம்!” என்றார்.
மற்றொரு சீடன், “நாம் இனிமேல் கவலைப்பட தேவையில்லை. தினமும் நல்ல உணவும் , பலகாரங்களும் சாப்பிடலாம்!” என்று குதித்தான்.
மடையன் , “குருவே! நாம் தாமதிக்க வேண்டாம் உடனே போய் அந்த இடத்தை தோண்டுவோம்," என்று உற்சாகமாக கூறினான்
“ஆம்! நல்லது. நாம் நாளைய பொழுது தோண்டினால், நகரமெல்லாம் அறிந்து விடும். அப்போது அனைவரும் ஒரு பங்கை கேட்பார்கள்!” என்று மட்டி சம்மதித்தான்.
அனைவரும் தோட்டத்திற்கு அமைதியாகப் போனார்கள். விளக்குடன் நிற்கும் முட்டாள், யாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தான் . பரமார்த்தர் ஒரு இடத்தில் தம் கைத்தடியால் ஒரு சுற்று வரைந்தார், உடனே மட்டி மற்றும் மூடன் தங்கள் கைகளால் வேகமாக அந்த இடத்தை தோண்டத் தொடங்கினார்கள் .
அவர்கள் மூச்சு வாங்க, மாறி மாறி மற்றவர்களின் தோண்டினார்கள். திடீரென தோண்டும்போது ஒரு வெள்ளைப் பொருள் தென்பட்டது . உடனே “குடம்! பொருள்! பொருள்!” என்று உட்சாகமாக கத்தி, இன்னும் வேகமாக தோண்டினார்கள் .அருகில் வந்த பரமார்த்தர் தமது கையால் அந்த பள்ளத்தில் உள்ள பொருளை எடுத்தார். இருட்டில் பார்ப்பதட்கு வட்ட வடிவத்திலான குடம்போல் தென்படாது, ஆவலுடன் அதை பார்க்க சீடர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு வெளிச்சத்தை கொண்டுவந்தார்கள்.
பரமார்த்தரின் கையில் இருக்கும் பொருளுக்கு அருகில் வெளிச்சத்தை கொண்டுவந்தான் மூடன் , வெளிச்சத்தில் பொருளை காட்டிப்பார்த்தார் குரு ...... ஓ அது ஒரு மண்டை ஓடு அதே! “அய்யோ! ஐயோ !” என்று அலறி, ஓட்டம் பிடித்தார்கள் சீடர்கள் .....
இதுவே அவர்களின் கனவு பொய்யானது!
Join the conversation