அத்தியாயம் 34

அன்பின் வழி

அன்று பெளர்ணமி கழிந்து நாள்கள் ஏழு ஆகி விட்டதால் பதினான்கு நாழிகைகளுக்குப் பின்பே கிருஷ்ணபக்ஷத்துச் சந்திரன் தலைகாட்ட முடியுமாகை யாலும், ஆந்தைகள் இரண்டு பலமாக அலறிய அந்தச் சமயம் சுத்த நள்ளிரவாய், பன்னிரண்டு நாழிகைகளையே அடைந்திருந்ததாலும் அக்ஷ்யமுனைப் பிராந்தியம் முழு வதும் பூர்ண இருளில் சிக்கியிருந்ததன் விளைவாக ஆந்தை களின் அலறல் மிகப் பயங்கரமாக இளையபல்லவன் காதுகளில் விழுந்தது. ஏழு நாள்களுக்கு முன்பு சித்ரா பெளர்ணமி அன்று பலவர்மனைப் பயங்கரமாக எச்சரித்து விட்டுப் போன வில்வலனோ, அவனைச் சேர்ந்த இதர பூர்வகுடி வீரர்களோ அக்ஷயமுனையில் தலைகாட்டா திருந்ததைப் பற்றி அழ்ந்த யோசனையிலிருந்த இளைய பல்லவன் திடீரெனப் புது யோசனை உதயமாகவே அதைப் பற்றிய சிந்தனையில் லயித்திருந்தானாகையால், முதல் முறை ஆந்தையின் அலறல் கேட்டதும் அதை அவ்வள வாகக் கவனிக்கவில்லையானாலும் இரண்டாம் முறை அதேவித அலறல் கேட்டதும் சற்றுக் காதுகளை நன்றாகத் தட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியிலும் சென்றான். அறையை விட்டு வெளியே வந்து தாழ்வரைக் கைப்பிடிச் சுவரின் ஓரமாக நடந்து சுற்று முற்றும் பார்த்த இளைய பல்லவன் காவலர் எச்சரிக்கைக் கூச்சலைத் தவிர வேறெந்த சத்தமும் எந்த இடத்திலும் கேட்காமல் ஊர் அடங்கிக் கிடக்கவே, ஆந்தையின் அலறலைக் கேட்டுத் ய ஷோ தான் கலங்கியது வீண் பிரமையென்று நினைத்து மீண்டும் அறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் மாடிப்படிகளைக் காவல் செய்து கொண்டிருந்த இரு வீரர்களையும் விளித்து, “நீங்களும் உறங்கச் செல்லலாம். இனி காவல் தேவையில்லை” என்று பஞ்சணையில் படுத்தவண்ணமே இரைந்து கூறிவிட்டுப் போர்வையை நன்றாக இழுத்துத் தலைவரையில் போர்த் துக்கொண்டு நித்திரையில் ஆழ்ந்தான்.

ஆனால் அதே அந்தையின் அலறலைக் கேட்டதும் தலையை முக்காடிட்டும் உடலையும் போர்த்து மறைத்துக் கொண்டு மாளிகையின் பின்புறத் தோட்டத்துக்குச் சென்ற பலவர்மன், மரத்து நிழலில் மறைந்து நின்ற ஒரு மனிதனை அணுகியதன்றி அவனுக்கு நல்வரவும் கூறினான். அந்த நல்வரவை ஏற்காமலும் தலையைச் சிறிதும் வணங்காமலும் மிகவும் முரட்டுத்தனமாக நின்ற அந்த மனிதன் அக்ஷ்ய முனைக் கோட்டைத் தலைவன் காதுக்கோ, எண்ணத் துக்கோ சிறிதும் இணங்காத சொற்களைப் பிரயோகிக்கத் துவங்கினான். “என்னை எதற்காக இங்கு வரவழைத்தாய் பலவர்மா?” என்ற அவனது ஆரம்பக் கேள்வியில் மரியாதை இல்லாதது மட்டுமல்ல, வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடந்தது.

வந்தவன், கிட்டத்தட்ட பலவர்மனுடைய உயரத்தை யும், பருமனையும், வயதையும் உடையவனாயிருந்தாலும் அவன் வஞ்சகமோ தந்திர புத்தியோ அற்ற வெறும் முரடனென்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அப்படி வஞ்சகனல்லாவிட்டாலும் நெஞ்சத் துணிவிலும் வாள் போரிலும் அவன் யாருக்கும் சளைத்தவனல்லவென்பதை இருட்டிலும் பளபளத்த அவனது கூரிய கண்களும், இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த நீண்ட வாளும் பறைசாற்றின. அவன் உடை பூராவும் ஏதோ ஒருவகைத் தோலால் செய்யப்பட்டிருந்தாலும் அந்தத் தோலில் தைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கற்களும், சரிகை வேலைப்பாடும் வந்தவனுக்குச் செல்வப் பஞ்சம் ஏதும் கடையாதென்பதை வலியுறுத்தின. அவன் பெருமீசை பயங்கரமாயிருந்தது. குரல் அதைவிடப் பயங்கரமாக ஒலித்தது. முதல் கேள்விக்குப் பலவர்மன் பதில் சொல்லாது போகவே. “என்னை வரவழைத்ததற்குக் காரணம் என்ன பலவர்மா?” என்று மீண்டும் ஒருமுறை கேள்வியைத் திருப்பினான் வந்தவன் இரைந்து.

“இரைந்து பேசாதே இடும்பா! இந்தத் தோட்டத்தின் மரங்களுக்கும் காதுகள் உண்டு.” என்று பலவர்மன் எச்சரிக்கை செய்தான்.

இதைக் கேட்டதும் அசுரனைப் போல் நிமிர்ந்து நின்ற இடும்பனின் இமைகள் வியப்பால் சற்றே முகத்தில் மேல் நோக்கி எழுந்தன. “பலவர்மனும் பயப்படும் காலம் வந்துவிட்டதா!” என்ற அவன் கேள்வியிலும் அந்த வியப்பு தொக்கி நின்றது.

பலவர்மன் நின்ற இடத்திலேயே சற்றுச் சங்கடத் துடன் அசைந்தான். “பலவர்மன் மட்டுமல்ல, பதக்குகளும், ஏன், சூளூக்களும் பயப்படும்படியான காலம் வந்திருக் கறது.” என்றான் பலவர்மன்.

“சொர்ணத் தீவின் பூர்வகுடிகள் அச்சமென்பதை அறியாதவர்கள்.” என்று சீறினான் இடும்பன்.

“அறியாதவர்களாய் இருந்தார்கள்.” என்று இருத்திய பலவர்மன் குரலில் ஏளனம் ஒலித்தது. கவலையும் அதில் கலந்திருந்தது.

“அப்படியானால் இப்பொழுது அச்சப்படுகிறார்கள் என்பது உன் எண்ணமா?” என்று வினவினான் இடும்பன்.

“சந்தேகமிருந்தால் வில்வலனை விசாரித்துப் பார்,” என்றான் பலவர்மன் பதிலுக்கு.

இதைக் கேட்ட இடும்பன் சிறிதும் சலிக்கவில்லை. “கடற்கரை நடனத்தின்போது நடந்ததைக் குறிப்பிடு கிறாயா” என்று கேட்டான் இடும்பன்.

“ஆம்” என்று கூறி, தலையையும் அசைத்தான் பலவர்மன்.

“அந்தக் கொலையைக் கண்டு வில்வலன் பயப்பட வில்லை. இரண்டே நாள்களில் இந்த ஊரைச் சூறையாடி விட ஏற்பாடு செய்திருந்தான். அதையும் நீ தடை செய்தாய்.” என்று குற்றம் சாட்டினான் இடும்பன்.

“ஆம், தடை செய்தேன்.

“ஏன்?”

“இரண்டாவது நாள் இந்த ஊரில் புகுந்து கொலை யும் கொள்ளையும் நீங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால்தான்?”

“அப்படி என்ன நிலை ஏற்பட்டது?”

“மக்களுக்குத் துணிவு ஏற்பட்டுவிட்டது. அவர் களுக்குத் தலைமை வடிக்கவும் ஊரைப் பாதுகாக்கவும் ஒரு பெரும் படைத்தலைவன் ஏற்பட்டுவிட்டான்.

“யாரோ அகூதாவின் உபதலைவனாமே, அவனோ?”

“அகூதாவின் உபதலைவன் மட்டுமல்ல அவன்.

“வேறு யார்! இந்திரனா? சந்திரனா?”

“இரண்டு பேரும் புராணப் பாத்திரங்கள். அவர் களின் சக்தி நமக்குத் தெரியாது. இவன் சக்தி தெரியும்.

“யாரிவன்?”

“சோழநாட்டின் படைத் தலைவர்களில் முதன்மை யானவன். பெரும் போர்களைக் கண்டவன், இந்த நகரத்தை உங்களிடமிருந்து பாதுகாப்பது அவனுக்குப் பிரமாதமல்ல.

“இடும்பனுடைய பயங்கர விழிகள் பலவர்மனை நன்றாக ஏறெடுத்து நோக்கின. “இனிமேல் இராக் காலங் களில் இருட்டுத்தான். நாளையே வில்வலன் காட்டுப் பகுதியிலிருந்தும், தான் கடற்பகுதியிலிருந்தும், இந்தக் கோட்டையைத் தாக்குவதை யார் தடுக்க முடியும்?” என்று வினவினான் இடும்பன்.

“இரண்டையும் சோழர் படைத்தலைவன் தடுக்க முடியும்.” என்று கூறிப் பெருமூச்செறிந்தான் பலவர்மன்.

இடும்பன் ஒருமுறை கடலிருந்த திக்கை நோக்கி னான். “கடற்போரில் என்னை வெல்ல அவனால் முடியுமா?” என்று கேட்டான் சற்றுக் கோபத்துடன்.

“அவன் அகூதாவிடம் பயின்றவன்” என்று சுட்டிக் காட்டினான் பலவர்மன்.

“சினத்துக் கொள்ளைக்காரர்களுக்கு சூளூக்கள் சளைத்தவர்களல்ல பலவர்மா! அதுதவிர, இந்தச் சோழர் படைத் தலைவன் மரக்கலமும் கரையில் இழுக்கப்பட்டுப் பழுது பார்க்கப்படுகிறது. இந்தச் சமயத்தில் நான் துறை முகத்தில் புகுந்தால் என்னை எதிர்க்க யாருமில்லை” என்று விளக்கினான் இடும்பன்.

பலவர்மன் மெல்ல நகைத்தான். அந்த நகைப்பினால் கோபம் உச்சநிலைக்குப் போகவே, “ஏன் நகைக்கிறாய்?” என்று கரகரப்பும் கடுமையும் நிறைந்த குரலில் கேட்டான் இடும்பன்.

“இடும்பா! நாளைக்கு எதற்கும் துறைமுகம் பக்கம் வந்து பார். அல்லது உன் ஒற்றர்களையாவது அனுப்பிக் கவனிக்கச் சொல். சோழர் படைத்தலைவன் தனது மரக்கலத்தைக் கரைக்கு இழுத்ததும், கடற்கரைக் கொள் ளையர் மரக்கலங்களைத் துறைமுக மார்க்கத்தில் சக்கர வட்டமாக நிற்க வைத்து அவற்றில் பெரும் போர்க் கலங்களையும் அமைத்திருக்கிறான். அந்தச் சக்கர வட்டத் துக்குள் நுழைந்துதான் எந்த மரக்கலமும் அக்ஷ்யமுனைக் கரையை நாட முடியும். அப்படி நுழையும் மரக்கலம் எதுவாயிருந்தாலும் அதைச் சுற்றிலும் கொள்ளையர் மரக் கலங்கள் சக்கரத்தின் பற்களைப் போல நெருங்கும். நுழை யும் மரக்கலத்தின் கதி என்னவாகுமென்று நான் சொல்ல வேண்டுமா?” என்று கேள்வி கேட்பதுபோல், உள்ள அபாயத்தையும் இளையபல்லவனின் போர் மூறையையும் விளக்கிய பலவர்மன் மேலும், சொன்னான் “அது மட்டு மல்ல இடும்பா! வில்வலனும் காட்டுப் பகுதி வழியாக நகரத்துக்குள் நுழைய முடியாது. அந்தப் பகுதியில் அமீர் என்ற அரபு நாட்டான் காவலிருக்கிறான். அவன்தான் குறுவாளெறிந்து உன் சகோதரனைக் கொன்றவன். அந்தப் பகுதியில் காட்டைக் கவனி. மதில் ஓரமாக இருந்த காடு அரைக்கால் காதத்துக்கு அழிக்கப்பட்டிருக்கிறது. மரக் கலத்தைச் செப்பனிட நகரத்தை அடுத்துள்ள மரங்களாகப் பார்த்து அமீர் வெட்டியிருக்கிறான். இதனால் இரட்டை லாபம். ஒன்று மரக்கலத்துக்கு நமது நாட்டின் வயிரம் பாய்ந்த மரங்கள் இடைத்தன. இன்னொன்று காட்டுக்கும் கோட்டை மக்களுக்கும் இடைவெளி நன்றாக ஏற்பட்ட தால் அமீரின் கண்ணில் படாமல் யாரும் கோட்டையை அணுக முடியாது. இடைவெளியில் ஓடிவரும் படையை அழிக்கப் பலமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறான் அமீர்.” என்று.

இந்த விவரங்களைக் கேட்ட இடும்பன் முகத்தில் அச்சத்துக்குப் பதில் கோபமே அதிகம் ஏற்பட்டது. “இத்தனையையும் ஏன் அனுமதித்தாய்?” என்று வினவினான்.

“வேறு வழியில்லை.” என்றான் பலவர்மன்.

“வழியைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பல்லவா?” எ ஆம்.

ப் ர “அப்படியானால் ஏன் கண்டுபிடிக்க முடிய வில்லை?”

“இரண்டு முறைகளைக் கையாண்டேன், பலிக்க வில்வை.



“என்ன முறைகள்?”

“அவனை வசப்படுத்தும்படி, என் மகளைத் தூண்டினேன். வேறு ஒருத்தியிடம் அவன் மனம் லயித்திருப்பதால் அவன் இணங்கமாட்டானென்று எதிர்பார்த்தேன். இணங் காவிட்டால் நமது வழக்கப்படி அவனை உங்களுக்கு இரையாக்கி விடலாம் என்று திட்டம் போட்டேன். அதற்காகச் சாட்சிகளையும் தயாரித்தேன். ஆனால் அந்தத் தந்திரம் பலிக்கவில்லை. மஞ்சளழகியை மணம் புரிந்து கொள்ள அவன் முன்வந்தான். சோழர்கள் விரோதியான ஸ்ரீவிஜயத்தின் படையில் சேரவேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டேன். நாட்டுப் பற்றுடைய அவன் அதற்கு ஒப்ப மாட்டான் என்று நினைத்தேன். அதற்கு ஒப்பி என் உபதளபதியாகி இந்த ஊரின் பாதுகாப்பைத் தன் சொந்த வேலையாக்கிக் கொண்டான். இரண்டு முறைகளிலும் தோல்வியுற்றேன். அவன் போக்கு, யோசனை எதுவுமே எனக்குப் புரியவில்லை. அவனை நான் நேர்ப் போரினால் வெற்றி கொள்ள முடியாது.” என்ற பலவர்மன் இடும்பனை உற்று நோக்கினான்.

இடும்பனும் தீவிர யோசனையில் ஆழ்ந்தான். பிறகு கேட்டான், சற்றுக் கவலையுடன், “வேறு என்ன வழி?” என்று.

பலவர்மன் முகத்தில் கவலை அலை பாய்ந்தது.

“ஒரு வழி இருக்கிறது?” என்று மெள்ளக் கூறினான் அவன் குரலிலும் கவலை பாய.

“சொல்!” இடும்பனின் குரலில் அவல் மிகுந்து நின்றது.

“அது அன்பின் வழி” என்றான் பலவர்மன் குரலை நன்றாகத் தாழ்த்தி.

“என் தொழிலில் அந்தச் சொல்லுக்கே இடமில்லை.

“இடம் ஏற்படுத்திக் கொள்.

“ஏற்படுத்தக் கொண்டால்?”

“எதிரியை ஒரு வழியாக ஒழித்துவிடலாம். அவனை மட்டுமல்ல, அவனுக்கு இப்பொழுது தாளம் போடும் இந்த நகர மக்களுக்கும், கடற்கரைக் கொள்ளையருக்கும் பெரும் படிப்பினையும் கற்பிக்கலாம்.

“வழியைச் சொல்.

“வழி என் மகள்?”

“யார் மஞ்சளழகியா?” ஆம்.

“அவளை என்ன செய்ய வேண்டும்?”

“கடத்திச் செல்ல வேண்டும்.

“இதைக். கேட்ட இடும்பன் பல விநாடிகள் பிரமை பிடித்து நின்றான். பிறகு காதில் விழுந்ததை நம்பாமலே கேட்டான், “உண்மையாகத்தான் சொல்கிறாயா பலவர்மா?” என்று.

“உண்மையாகத்தான் சொல்கிறேன். சந்தேகம் வேண்டாம்.” பலவர்மனின் குரல் திடமாக இருந்தது.

“இந்த அக்ஷ்யமுனையையும் கடற்பகுதியில் ஸ்ரீவிஐ யத்தையும் பலப்படுத்த நீ அவனைத் துணைத்தலைவனாக நியமித்துக் கொண்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார் களே, என்று கேட்டான் இடும்பன்.

“அப்படியும் அதற்கு வியாக்கியானம் செய்யலாம். பலவர்மன் குணத்தையும் மனத்தையும் அறியாதவர்கள் கொள்ளும் பொருள் அது.” என்று பலவர்மன் சொன்ன பதிலில் பெரிதும் குரூரமும் வஞ்சகமும் கலந்து ஒலித்தது.

இடும்பன் மீண்டும் சற்று யோடித்தான். “மஞ்சளழகி உன் பெண்ணல்லவா பலவர்மா?” என்று கேட்டான் அவன்.

“இல்லை, வளர்ப்புப் பெண்.

“வளர்த்த பாசம் உன்னை விடுமா?”

“விடாது.

“அப்படியானால் அவள் நாசத்தை ஏன் விரும்பு கிறாய்?”

“நாசத்தை விரும்பவில்லை.

இடைக்காலத்தில் சில நாள் பிரிவுதான்.

“இருப்பினும் அவள் மனம் உடையுமே!”

“உடையும்.

“அது உனக்குத் திருப்தியா?”

“இல்லை. ஆனால் அதைவிட முக்கியம் ஸ்ரீவிஜயத் தின் சக்தி, அக்ஷயமுனைக் கோட்டையில் என் ஆதிக்கம், ஆகிய இரண்டும்.

“ஆனால் அவள்...

“அவள் வரலாற்றுச் சதுரங்கத்தில் ஒரு காய். ஸ்ரீ விஜய வரலாற்றின் பெருமைக்கு அவள் அன்பு இடையூறாக இருந்தால் அதையும் உடைக்க வேண்டும். பெரிய வல்லரசு களின் மோதலில் பல உயிர்களின் நாசம், பலர் வாழ்வின் நாசம், நகரங்களின் நாசம் எல்லாம் ஏற்படுவது இயற்கை.

“அப்படியானால் மஞ் சளழகியை...

ப தான் இடும்பன்.

“இப்படி அருகில், வா” என்று இடும்பனை அழைத்த பலவர்மன் அவன் காதுக்கருகில் கஇசுகிசுவென ஏதோ சொன்னான். அதைக் கேட்டதும் தணலை மிதித்து விட்டவன் போல் அதிர்ச்சியடைந்த இடும்பன், “இதை எப்போது துவங்க வேண்டும்!” என்று வினவினான் குரல் நடுங்க,

“இந்த அமாவாசை போக அடுத்த அமாவாசைக்கு ஒரு வாரம் முன்னதாக.” என்று வந்தது பலவர்மன் பதில்.

என்று இழுத் “ஏன் அத்தனை நாள்கள்?”

“கோட்டையிலுள்ள மக்கள் சற்று அசந்து தூங்க அத்தனை நாளாகும்.

“இதுதான் அன்பின் வழியா!” என்று கூறி வெறுப்புச் சிரிப்புச் சிரித்தான் இடும்பன்.

“ஆம், ஒருவிதத்தில் அன்பின் வழிதான் இது. எந்த வழியாயிருந்தாலும் உன்னையும் என்னையும் காப்பாற்றிக் கொள்ளச் சிறந்த வழி இதுதான்.” என்று குறிப்பிட்டான் பலவர்மன்.

இடும்பன் பலவர்மனை ஏறெடுத்து நோக்கினான். “பலவர்மா! சுயநலத்துக்காக எத்தனையோ பேரைக் கொன்றிருக்கிறாய். ஆனால் மகளின் மனத்தையும் வாழ் வையும் உடைக்க முனைவாய் என்று நான் இன்று வரை எண்ணவில்லை. அதற்கும் துணிந்துவிட்டாய். சரி உன் இஷ்டப்படி செய்கிறேன். ஆனால் உன் வளர்ப்புப் பெண்ணின் பெற்றோருக்கு நீ பதில் சொல்ல வேண் டாமா?” என்று கேட்டான்.

“தாய் இல்லை அவளுக்கு. தந்தைதான் இருக்கிறார். இவளை மகளென்று சொன்னாலே அவர் தலைக்குத் தீம்பு வரும். ஆகவே அவர் இவளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.

“அத்தனை சிக்கலா அவள் பிறப்பு ரகசியம்?” ள் ஆம்.

ஜு “அதைப்பற்றிய தகவல் ஏதாவது.. .?”

“யாருக்கும் தெரிய வராது. அந்தத் தகவல் என் சொந்தப் பெட்டியில் இருக்கிறது. பெட்டியின் சாவி இதோ இருக்கிறது.” என்று தன் மார்பில் ஊஞ்சலாடிய சங்கிலியி லிருந்த ஒரு சாவியைக் காட்டினான் பலவர்மன்.

அதனால் திருப்தியடைந்த இடும்பன் உள்ளூர பலவர்மனின் கொடுமையை நினைத்து வெறுத்துக் கொண் டாலும் அவன் யோசனைப்படி நடப்பதாக வாக்குறுதி கொடுத்துப் பின்புற வாயில் வழியாக வெளியேறினான். அவன் வெளியேறியதைப் பார்த்துக்கொண்டு நின்ற பலவர்மன், அன்பின் வழி! ஆம், அதுதான் சிறந்த வழி. அன்புக்கு அழிக்கும் சக்தியும் உண்டு. சீக்கிரமே அதைப் புரிந்நுகொள்வாய் இளையபல்லவா!” என்று தனக்குள் சொல்லிக் குரூரமாகச் சிரித்துக் கொண்டும் மிகுந்த மனத் திருப்தியுடனும் திரும்பவும் மாளிகைக்குள் சென்றான் அநீத வஞ்சகன்.