அத்தியாம் 23

கரும்பும் கூலியும்

தந்தை சொன்ன சொற்களால் சிந்தை நெகிழ்ந்து பஞ்சணையில் கடந்த மஞ்சளழகியின் மலர் விழிகளில் கனவுச் சாயை பல விநாடிகளுக்குப் படர்ந்து நின்றது. பெற்ற தந்தையென்று அன்று வரை தான் நினைந்திருந்தவர் துடீரென வளர்ப்புத் தந்தையாக மாறிவிட்டதை எண்ண, எண்ண அவள் மனத்தில் விவரிக்க இயலாத குழப்பமும் வருத்தமும், இன்பமும் கலந்து தாண்டவமாடின. இளைய பல்லவன் தன் வாழ்வில் அன்று காலையில்தான் காலடி எடுத்து வைத்தானானாலும் அந்த ஒரே நாளில் ஏற்பட்டு விட்ட பல சிக்கல்ளை நினைத்தால் குழப்பமும், தனது பிறவியே பெரும் கதையாகி உண்மைத் தாய் தந்தையர் யாரென்பதை அறிய முடியாத காரணத்தால் வருத்தமும், இடையிடையே இளைய பல்லவனின் வீரமும் சிந்தையில் வளைய வந்ததால் இன்பமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பின்னி ஏதேதோ கனவு அலைளை அவள் மனத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்தன. அந்தக் கனவின் விளைவாகப் பஞ்சணையில் தன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்ட பலவர்மனைக் கூட அவள் நீண்ட நேரம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அக்ஷ்யமுனைக் கோட்டைத் தலைவன் சொன்ன தன் பிறவிப் பெரும் கதைக் காட்சியைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தாள். பத்தொன்பது வருடங் களுக்கு முன்பு பெய்த அந்தப் பெருமழை அவள் சிந்தையில் அப்பொழுதும் பெய்தது. அந்தப் பெரும் காற்று அந்த விநாடியிலும் அவள் இதயத்தின்மீது விர்விர்ரென்று அடித்தது. தன்னைத் துணியில் சுற்றித் தூக்கி வந்த வீரனையும் அவள் மனக் கண் பார்த்தது. அவன் வெளிப் பெருங் கதவைத் தடதடவெனத் தட்டின தட்டல் அவள் இதயத்தைப் பலமாகத் தட்டியது. ‘எங்கிருந்து வந்தேன்? எதற்காக இங்கு வளர்ந்தேன்? நான் யார், நான் யார்?” என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப அவள் புத்தியில் எழுந்ததால் வேதனை விளைந்ததேயொழிய விடை எதுவும் கிடைக்க வில்லை அவளுக்கு. இந்த வேதனையுடன் வேதனையாக இளையபல்லவனையும் நினைத்துப் பார்த்த மஞ்சளழகி அவனிடம் சீற்றம் கொள்வதா காதல் கொள்வதா என்பது சரியாக விளங்காததால், உள்ளது காதலானாலும் அதை மறைத்துச் சீற்றம் கொண்டுவிட்டதாகத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டாள் - அன்றுவரை அக்ஷயமுனைக் கோட்டைத்தலைவனின் அருமந்த செல்வியாக, கொள் ளையரைக் கவர்ந்த ராணியாக, எந்தக் கல்மஷமும் அற்ற சுதந்திரப் பறவையாக திரிந்து வந்த தன் வாழ்வு, இளைய பல்லவன் வருகையால் எத்தனை மாற்றத்தை அடைந்து விட்டது என்பதை எண்ணி, “இவர் ஏன் வந்தார் இங்கே?” என்று கடும் கோபத்துடன் தன்னைக் கேட்டுக்கொண்டாள். அந்தக் கோபத்தின் ஊடே எழுந்த இளயை பல்லவனின் ரித்த முகம், சிங்கத்தின் குகைக்குள் புகுந்து சிங்கத்தையே மிரட்டுவது போல் தன் தந்தையை மிரட்டிய காட்சி, வில்வலனது வாளை அனாயாசமாகத் தன் வாளால் சுழற்றி வானத்தில் விசிறிவிட்ட அற்புதம், இவை அந்தக் கோபத்தைப் பெரிதும் சமனப்படுத்தின. அத்துடன் கடைசியாக அவன் தன் இடையைத் தொட்டது, தொட்ட கை தொட்ட இடத்தில் நின்றது, இவற்றை நினைக்க நினைக்க இன்ப அலைகள் அவள் உடலை ஊடுருவிச் சென்றன.

இப்படி மாறுபட்ட உணர்ச்சிகளால் ஏற்பட்ட மன அலைச்சலாலும், அவற்றின் விளைவாக எழுந்த கனவுக் காட்சிகளாலும் பேசாமலே நீண்ட நேரம் படுத்துக் கடந்த ய ஞு மஞ்சளழகி கடைசியாக, தன் மனத்தைச் சற்றே திடப் படுத்திக் கொண்டு மெள்ளப் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து கனவிலிருந்து விழித்தவள் போல் தன் கண் களைக் கசக்கிக் கொண்டாள். அவள் மன ஓட்டத்தையும் நெகிழ்ச்சியையும் இன்ப துன்பங்களையும் மாறிமாறித் தெரிந்த முக பாவங்களிலிருந்து உணர்ந்து கொண்ட பலவர்மன் அவள்மீது பரிதாபம் கலந்த பார்வையை வீசியதன்றி, “மகளே! பெருங்குடி மக்கள் எந்த அதிர்ச்சி யையும் தாங்கக் கடமைப்பட்டவர்கள். நாட்டு வரலாற்றில் பிணைபட்டிருப்பவர்கள். மன அலைச்சலுக்கு இடம் கொடுப்பதில் அர்த்தமில்லை” என்று அன்புடன் கூறவும் செய்தான்.

அவன் பேச்சில் பெரும் பொருள் புதைந்து கடப் பதை மஞ்சளழக உணர்ந்துகொண்டாள். தான் பெருங்குடி மகளென்பதையும், தன்னைச் சூழ்ந்திருக்கும் மர்மத்தாலும் தான் மனம் நெகிழ்வது உ௨உசிதமில்லையென்பதையும் கடமையை முன்னிலையில் வைத்துக் காரியம் செய்வதே தன் பொறுப்பு என்பதையும் தந்த சுட்டிக் காட்டுகிறார் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்ட மஞ்சளழகி “தந்தையே” என்று மேலும் விளக்கம் கேட்கக் கொஞ்சும் குரலில் பலவர்மனை அழைத்தாள்.

அசுர குணமுள்ள பலவர்மனின் முகத்திலும் அந்தச் சொல் பெரும் இன்பத்தை விளைவித்தது. “மகளே!” என்று அவனும் அவளை அழைத்தான்.

மஞ்சளழகியின் மலர்விழிகள் அவனை ஏறெடுத்து நோக்கின.“ஏன் தந்தையே?” என்று வினவினாள் அவள், அன்பு ததும்பும் குரலில்.

பலவர்மன் கூறிய பதிலில் உணர்ச்சி பெரிதும் பிரவாகித்தது. “உனக்கு நான் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன் மகளே!” என்ற பலவர்மன் குரலில் ஒரு குழைவும் இருந்தது.

அந்தச் சல நாழிகைகளில் பலவர்மன் அத்தனை தூரம் மாறிவிட்டது மஞ்சளழகிக்குப் பெரும் வியப்பா யிருந்தது. உணர்ச்சிகளைச் சிறிதும் வெளிக்குக் காட்டாத வரும், திடமாகப் பேச வல்லவருமான தன் தந்தையின் பேச்சும் இதயமும் இத்தனை தூரம் குழையும் என்பதை அவள் சொப்பனத்திலும் நினைக்காததால் வியப்பு விகசித்த முகத்துடன் பலவர்மனை நோக்கி, “எதற்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்?” என்று வினவினாள்.

“நான் உன் தந்தையல்ல என்பதைத் தெளிவு படுத்தினேன்...” என்றான் பலவர்மன் சற்றுத் தயக்கத்துடன்.

“ஆம், தெளிவுபடுத்தினீர்கள்.” என்றாள் மஞ்சளழகி அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை அறியாமல்.

“தந்தையல்ல என்று தெரிந்த பின்பும், தந்தையே என்று அழைக்கிறாய்?” இதைச் சொன்ன பலவர்மனின் குரல் பெரிதும் தழுதழுத்தது. அவள் குழலைக் கோதிய கையும் லேசாக நடுங்கியது.

அவன் இதய தாபத்தை மஞ்சளழகி நன்றாகப் புரிந்து கொண்டாள். தந்தை மற்றவருக்கு ஆயிரம் துஷ்டரா னாலும், தான் சம்பந்தப்பட்டவரை அவர் அன்பின் சொருபம் என்பதையும், தானில்லாவிட்டால் அவர் வாழ்வே அவருக்கு அர்த்தமற்றதாகிவிடும் என்பதையும் அறிந்துகொண்ட மஞ்சளழக, தந்தையின் தாபம் மிகுந்த இதயத்தின் வறட்சிக்கு அன்பு நீரை ஊற்ற, “எனக்குத் தெரிந்த தந்த நீங்கள்தானே?” என்று கூறினாள்.

“ஆம் இருப்பினும் மாற்றம் தெரிந்தபின் மனம் மாறுவது இயற்கை.” என்றான் பலவர்மன்.

“இயற்கை அப்படியும் இருக்கலாம்.” என்றாள் அவள்.

“வேறெப்படி இருக்கும்?”

“தெரிந்து பழகிய இடத்தில் ஊறிவிட்ட அன்பும் உறவும் தெரியாத இடத்துக்குத் இடீரென மாறாதிருப்பதும் இயற்கைதான்.

“ய ஷு “அப்படியானால் உன் அன்பு.. .?”

“உங்களிடமிருந்து எப்படி மாறும்?”

“ஏன் மாறக்கூடாது? நீ யாரென்பதையே தான் மறைத்து வைக்கவில்லையா?”

“மறைத்தாலென்ன ? மகளைப்போல் வளர்த்தீர்கள்.

“வளர்க்க வேண்டிய கடமையிருந்தது.

வளர்த்தேன்.

“எல்லோரும் கடமையை நிறைவேற்றுகிறார்களா?”

“இல்லை. ஆனால் நிறைவேற்ற எனக்கு அவசிய மிருந்தது.

“என்ன அவசியம்?”

“உன்னைப் பெற்றவரின் ஆணை.

“யார் அவர்?”

இதைக் கேட்டதும் பலவர்மனின் இதழ்களில் வருத்தம் தோய்ந்த புன்முறுவலொன்று படர்ந்தது. “சொல்ல எனக்கு உரிமையுமில்லை, துணிவுமில்லை.” என்று அந்தப் பழைய பல்லவியையே அவன் பாடினான்.

அந்தப் பதிலைத் தொடர்ந்து மஞ்சளழகி ஏதேதோ கேள்விகளைக் கேட்டும் பலவர்மனிடமிருந்து மர்மத்தை விளக்கக்கூடிய சொல் எதுவுமே வரவில்லை. அவளது பிறவி மர்மத்தை உடைக்கத் திட்டமாக மறுத்துவிட்ட அக்ஷயமுனைக் கோட்டைத்தலைவன் ஒன்று மட்டும் சொன்னான், “மகளே! உன் பிறவியின் மர்மம் ஒருநாள் வெளிப்பட்டாலும் வெளிப்படலாம். மறைந்தே இருந்தாலும் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயம் நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். இளையபல்லவனுக்கு நீ எந்தவிதத்திலும் தாழ்ந்தவள் அல்ல. அவன் எத்தனை பெருங்குடி மகனோ அத்தனை பெருங்குடியில் நீயும் பிறந்தவள். உனக்கு அவன் தகுதியல்லவென்று எனக்குத் தோன்றியிருக்கும் பட்சத்தில், உன் ரத்தத்துக்கு இணையான ரத்தம் அவன் உடலில் பாயவில்லையென நான் கருதும் பட்சத்தில் அகூதாவி னால் அந்த அக்ஷ்யமுனைக் கோட்டம் அழிந்து போவதா னாலும் இளையபல்லவன் உன்னை அணுகக்கூட விட மாட்டேன். நீண்ட யோசனைக்குப் பிறகே உன்னை இளையபல்லவனுக்குக் கொடுப்பதில் தவறில்லையெனத் தீர்மானித்தேன். பிற்காலத்தில் ஒருவேளை உன் பிறவி மர்மம் வெளிப்பட்டாலும் உன் திருமணத்தை யாரும் ஆட்சேபிக்க முடியாது. நீ அவனை மணப்பதால் உன் விருப்பம் பூர்த்தியாவது மட்டுமல்ல, அக்ஷயமுனைக்குப் பூர்வகுடிகளால் ஏற்படும் ஆபத்து சமாளிக்கப்படுவது மட்டுமல்ல, ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துக்கும் பெரும் பலன் ஏற்படும்.” என்றான் பலவர்மன்.

“ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துக்கு என்ன பலன் ஏற்படும்?” என்று வினவினாள் மஞ்சளழகி.

“பெரும் படைத்தலைவன் ஒருவன், அதுவும் தற்சமயம் கடற்படைப் போரில் வல்லவனொருவன் சோழர்களிடமிருந்து ஸ்ரீவிஜயத்திடம் இழுக்கப்படுவான்,” என்றான் பலவர்மன்.

“இழுபட அவர் இஷ்டப்படாவிட்டால்?”

“நீ கடைக்கமாட்டாய் அவனுக்கு.

“அதை அவர் பொருட்படுத்தாவிட்டால்?”

பலவர்மனின் இதழ்களில் புன்முறுவல் தாண்டவ மாடியது. “மனிதனை அறியும் சக்தி ஒரளவு உன் தந்தைக்கு உண்டு மகளே! ஆடலில் உன் கை நீட்டுக்கு இழுபட்ட அந்த ஆடவன் நீ நினைத்தபடி ஆடுவான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. கரும்பு தின்னக் கூலியா என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.” என்று சுட்டிக் காட்டினான் பலவர்மன்.

“உண்டு.” என்றாள் மஞ்சளழக சங்கடத்துடன்,

“கரும்பும் தருகிறேன், கூலியும் தருகிறேன்.

கசக்கிறதா அவனுக்கு?”

“கூலியா7”

“ஆம். நீ கரும்பு, அக்ஷ்யமுனைக் கோட்டையில் எனக்கு அடுத்த பதவி யாருக்கும் எளிதில் கிட்டாத பெரும் பதவி அதையே கூலியாக அளிக்கிறேன்.

“இரண்டையுமே அவர் வெறுத்தால்?”

பலவர்மன் சிறிது நேரம் பதிலேதும் சொல்லவில்லை. ஏதோ யோசித்துவிட்டுச் சொன்னான், “வெறுக்காம விருக்கும்படி. பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு” என்று.

“என் பொறுப்பா!’’ அவள் கேள்வியில் வியப்பு மண்டிக் கடந்தது.

“ஆம்.

“என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“மீண்டும் ஒரு தந்தை மகளிடம் பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசச் சொல்கிறாய் மகளே! பேச இஷ்டமில்லை எனக்கு. ஆனால் கடமையை முன்னிட்டுப் பேசுகிறேன். வண்டை வூகரிக்கும் முறையை மலருக்கு யாரும் சொல்லித் தருவதில்லை. மனத்தை ஒருவனிடம் பறிகொடுத்த கற்புடைய மகளிருக்கு அவனை மணாள னாக அடைவதற்கான அவசியத்தையும் யாரும் புகட்டுவது இல்லை” என்று கூறிவிட்டு, அதற்குமேல் அங்கிருக்க இஷ்ட மில்லாமல் எழுந்திருந்து விடுவிடுவென அந்த அறையை விட்டு வெளியேறினான் பலவர்மன். மஞ்சளழகிக்குப் படுக்கும் அறை, மாளிகையில் தனியே இருந்தாலும் அந்த அறைக்குப் போகாமல் இந்த இரவு முழுவதும் பஞ்சணை யிலேயே படுத்துக் கிடந்தாள். தந்தை கூறிய பல விஷயங்கள் மனக்கூடத்திலேயே எழுந்து போராட, திரும்பத் திரும்ப நினைத்த விஷயங்கள் சிந்தையில் உலாவி வர, பஞ்சணை யில் புரண்டாள் அவள். நித்திரையின்றி அப்படிப் புரண்டவளின் மனநிலை, பொழுது விடிந்ததும் பெரும் குழப்பத்திலிருக்கவே அந்தக் குழப்பத்தை நீக்கக்கொள்ளும் நோக்கத்துடன் பல் துலக்கி முகம் கழுவிச் சிறிது பாலை ர ம மட்டும் பருகிவிட்டு மாற்றுடை அணிந்து மாளிகையை விட்டு வெளியே நடந்தாள். எங்கு செல்ல வேண்டும் என்ற நிர்ணயமில்லாமல் கால் சென்ற வழியே நடந்த மஞ்சளழக, கடைசியில் கடற்கரைக்கே வந்து சேர்ந்தாள். அவள் கால்கள்தான் காரணமின்றி அவளை அங்கு இழுத்து வந்தனவா அல்லது அவள் மனம்தான் கால்களை அந்தக் கடற்புறத்துக்குத் திருப்பிவிட்டதா என்பதை எண்ணியும் விளங்காத சிந்தையுடன் கொள்ளையர் குடிசைகளை நாடிச் சென்றாள் மஞ்சளழகி. செல்லும் வழியில் ஒரே ஒரு விநாடி மட்டும் நின்று இளையபல்லவனின் மரக் கலத்தை ஏறிட்டு நோக்கினாள் அவள். அடுத்த விநாடி அந்த மரக்கலம் இருந்த திசைக்கு நேர் எதிர்த்திசையில் நடந்தாள் அவள். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அன்று இளைய பல்லவன் கண்களில் படக்கூடாதென்று உறுதிகொண்ட மஞ்சளழக, கடற்கரையில் கிழக்குக் கோடியில் இருந்த யவனர்கள் குடிசைகளை நோக்கி வேகமாக நடந்தாள். அந்தக் குடிசைக் கூட்டத்தின் யவன மாலுமிகளின் தலைவ னின் குடிசைக்குள் நுழைந்து அங்கிருந்த துணைவியின் உதவியால் நீராடும் இடையாடையும் மேலாடையும் அணிந்த மஞ்சளழகி தன் இதய தாபத்தையும், அதனால் ஏற்பட்ட உடல் வெப்பத்தையும் தணித்துக் கொள்ளக் கடலில் நீராடும் நோக்கத்துடன் கடலலைகள் தரைமீது மோதிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தாள். அவள் போகும் நிலையைப் பார்த்த யவன கொள்ளைக்காரர் களும் அவர்கள் துணைவிகளும் அவள் முகத்திலிருந்த ஏக்கத்தையும் கண்களில் சிவப்பையும் கண்டு அவளை அணுகாமல் எட்டவே நின்றார்கள். அப்படி எட்ட நிற்கா மல் விசாரிக்க அருகில் வந்த ஒரிரு கொள்ளைக்காரர் களைக் கையால் விலக்கிவிட்டு நீர்க் கரையை நோக்கிச் சென்ற மஞ்சளழக படகுகளோ வலைஞரோ இல்லாத டட. தெம்பை பழம தனி இடமாகப் பார்த்துக் கடல் நீரில் இறங்கி அலைகளில் மூழ்கினாள். அவள் அழகிய உடலை அலைகள் ஆசையுடன் தூக்கி தூக்கிப் புரட்டிக் கொடுத்தன. அவள் அலைகளில் நீந்திச் சென்றாள். கடலின் அலைக்கரங்கள் அவள் உடல் அசதியைப் போக்கப் பிடித்துப் பிடித்துச் சுழன்றன. அலைகள் எழுப்பிய காற்றின் சத்தமும் அவள் சித்தத்தின் குழப்பத்தைத் துடைத்துச் சுத்தம் செய்தது. காலை வெய்யில் கிளப்பிய இதமான உஷ்ணம்கூட அவளுக்குப் பெரும் சாந்தியை அளித்தது. எந்தத் துன்பத் தையும் குழப்பத்தையும் துடைக்கும் இயற்கையின் இணை யிலாச் சக்தியை எண்ணி அவள் வியப்பெய்தினாள். அந்த. வியப்புடனும் மனச் சாந்தியுடனும் ஓரளவு மகழ்ச்சி யுடனும் நீண்ட நேரம் அலைகளில் திளைத்து விளை யாடிய மஞ்சளழகி, ஒர் அலையில் புரண்டு கரைக்கு வந்து தன்னிரு கால்களையும், தரையில் ஊன்றி எழுந்து நின்றாள். “இனி நான் என் வாழ்வைப்பற்றி நிதானமாக யோசிக்க முடியும்.” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அலைகள் காலில் திரும்பத் திரும்ப நுரையைப் பாய்ச்ச நீர்க்கரையோரமே நடந்து சென்றாள். கடைசியாக தலையைத் துவட்ட முயன்று மணல் வெளிக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கடல்நீர்ப் புறம் திரும்பி மேலாடையைப் பிழிந்து தலையைத் துவட்ட முயன்றாள். தலையில் வைக்கும் தருணத்தில் துவட்ட வேண்டிய மேலாடை கை தவறிக் கீழே விழுந்தது. அதை எடுத்து நீட்டியது ஒரு கரம். அதிர்ச்சியுற்று திரும்பினாள் மஞ்சளழகி, முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு கை மட்டும் ஆடையை நீட்ட நின்று கொண்டிருந்தான் இளையபல்லவன்.